முகப்பு
இந்தியா

தேஜஸ் விமானங்கள் கொள்முதலால் 50 ஆயிரம் வேலைவாய்ப்பு: ராஜ்நாத் சிங்

தேஜஸ் விமானங்களை கொள்முதல் செய்வதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:18 PM
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (கோப்புப்படம்)
பகிர்:

தேஜஸ் விமானங்களை கொள்முதல் செய்வதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.

இந்திய விமானப் படைக்கு சுமார் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில்  83 இலகுரக ‘தேஜஸ்’ போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதில் விமானப்படை வீரா்கள் பயிற்சி மேற்கொள்வதற்காகவே 10 போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.

போர் விமானங்கள் வடிவமைப்பு, கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.1,202 கோடிக்கான ஒப்புதலையும் மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது.

இதனிடையே தேஜஸ் விமானங்கள் கொள்முதலால் நாட்டில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், சுயசார்பு திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி கொள்கையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் 83 இலகு ரக ‘தேஜஸ்’ போர் விமானங்களைக் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்தது வளர்ச்சியை நோக்கிய மிக முக்கிய அடியாக உள்ளது. இதன் மூலம் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும். சிறு குறு தொழில்கள் உள்பட டாடா, எல் அண்ட் டி போன்ற போன்ற பெரு நிறுவனங்களும் அரசு மற்றும் தனியார் உற்பத்தியை அதிகரிக்கும் என்று கூறினார். 

முழு கட்டுரையைப் படிக்க →