லடாக்கில் ராணுவ வீரர்களுக்கு கரோனா தடுப்பூசி 
இந்தியா

லடாக்கில் ராணுவ வீரர்களுக்கு கரோனா தடுப்பூசி

லடாக் யூனியன் பிரதேசத்தில் ராணுவ வீரர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

DIN

லடாக் யூனியன் பிரதேசத்தில் ராணுவ வீரர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று (ஜன.16) காலை 10.30 மணியளவில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் போன்ற முன்களப் பணியாளர்களுக்கும், காவல்துறையினர், ராணுவ வீரர்களுக்கும் தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது,

இது தொடர்பாக பேசிய தடுப்பூசி போட்டுக்கொண்ட வீரர்கள், தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு உடலில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை என்றும், பக்கவிளைவுகளுக்கான அறிகுறிகளும் இல்லை என்றும் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT