இந்தியா

லட்சக்கணக்கானோர் பதிவிறக்கம்: சிக்னல் சந்தித்த தொழில்நுட்பக் கோளாறு 

ENS


உலகளவில் பல லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் சிக்னல் செயலியை பதிவிறக்கம் செய்ததால், சிக்னல் சர்வர்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

சிக்னல் செயலியைப் பயன்படுத்தி செல்லிடப்பேசி அல்லது கணினி வாயிலாக தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியவில்லை என்று உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பயனாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து சிக்னல் செயலி நிர்வாகம், தனது அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனை உடனடியாக சரி செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ்ஆப் செயலி, புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, லட்சக்கணக்கானோர் வாட்ஸ்ஆப்பை புறக்கணித்து டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிகளுக்கு மாறி வருகிறார்கள்.

ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் சிக்னல் செயலியை பதிவிறக்கம் செய்ததால், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், கூடுதல் சர்வர்கள் இணைக்கப்பட்டு, திறனை மேம்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வாட்ஸ்ஆப் செயலி, தனது புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் கால அவகாசத்தை மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT