முகப்பு
இந்தியா

ராமர் கோயில் கட்ட ரூ.2 லட்சம் நன்கொடை வழங்கிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோயில் கட்ட அம்மாநில முதல்வர் யோகி ஆதித்ட்யநாத் ரூ.2 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:18 PM
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்
பகிர்:

உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோயில் கட்ட அம்மாநில முதல்வர் யோகி ஆதித்ட்யநாத் ரூ.2 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கோயில் கட்டுவதற்காக நாடு முழுவதும் நன்கொடை வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராமர் கோயில் கட்டுவதற்காக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளைக்கு ரூ.2 லட்சம் மதிப்புடைய காசோலையை வழங்கினார்.

முன்னதாக, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஒரு லட்சம் ரூபாயும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ரூ.5,00,100 நன்கொடை அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →