இந்தியா

தில்லி வன்முறை: தொலைபேசி அழைப்பு பதிவுகளை பாதுகாக்க உத்தரவு

DIN

கடந்த ஆண்டு பிப்ரவரி 20- 28 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்த வடகிழக்கு தில்லி வன்முறையில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேர் தொடர்புடைய தொலைபேசி அழைப்புப் பதிவுகளைப் (சிடிஆர்) பாதுகாக்குமாறு தில்லி காவல் துறைக்கு தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
 இது தொடர்பான விவகாரத்தை விசாரித்த தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் தினேஷ்குமார், குற்றம் சாட்டப்பட்டவர்களின் செல்லிடப்பேசி எண்களின் அழைப்பு விவரப் பதிவுகளை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார்.
 மேலும், சிடிஆர் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் 10 நாள்களுக்குள் மேற்கொண்டு, நீதிமன்ற உத்தரவு இணக்க அறிக்கையை பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று விசாரணை அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம்

SCROLL FOR NEXT