இந்தியா

கூட்டாட்சிக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது: பினராயி

DIN

விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையில், கூட்டாட்சிக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

இதனிடையே சட்டப்பேரவையில் இது குறித்து பேசிய முதல்வர் பினராயி விஜயன், ''திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளது.

எனினும் மத்திய அரசு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. மத்திய அரசு கூட்டாட்சிக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மாநில அரசின் தேவைகளை அது நிராகரிக்கிறது'' என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செங்குன்றத்தில் அரசுப் பள்ளிகள் சாதனை

கோடை கால சிறப்பு பயிராக நிலக்கடலை, பயறு வகைகளை பயிரிட விழிப்புணா்வு

திருவள்ளூா் - ஊத்துக்கோட்டை சாலை ஆற்றம்பாக்கம் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மந்தகதியில் மேம்பாலப் பணி: விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

தில்லி ஜாமா மசூதி பகுதியில் கினாரி பஜாரில் கடையில் தீ விபத்து

ஆளுநா் மீதான குற்றச்சாட்டை பேச மறுப்பது ஏன்? பிரதமருக்கு மம்தா கேள்வி

SCROLL FOR NEXT