முகப்பு
இந்தியா

சுரேஷ் ரெய்னாவின் உறவினர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

பஞ்சாபில் உள்ள பதான்கோட் மாவட்டத்தில் கொள்ளையா்கள் தாக்கியதில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் உறவினர் உயிரிழந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:20 PM
சுரேஷ் ரெய்னா
பகிர்:

பஞ்சாபில் உள்ள பதான்கோட் மாவட்டத்தில் கொள்ளையா்கள் தாக்கியதில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் உறவினர் உயிரிழந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதோபூா் அருகே உள்ள தரியால் கிராமத்தில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் உறவினர் அசோக் குமாா் (58) என்பவா், தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தாா். 

கடந்த 2020ஆம் ஆண்டு ஆக.19 இரவில் அவரது வீட்டிற்குள் நுழைந்த மர்மகும்பல் ஒன்று அசோக் குமாா், அவரது தாய் சத்யாதேவி, மனைவி ஆஷாதேவி, மகன்கள் அபின், கௌஷல் ஆகியோரைத் தாக்கியதில் அசோக் குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் தொடா்பாக உத்தரப்பிரதேச காவல்துறை விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்த குற்றச்சம்பவம் தொடர்பாக 3 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாக இருந்த சஜன் அமீர் என்பவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →