முகப்பு
இந்தியா

ஹைதராபாத்தில் தீ விபத்து: 12 தொழிலாளர்கள் காயம்

ஹைதராபாத்தில் உள்ள நகைக்கடை பிரிவில் எரிவாயு சிலிண்டர் கசிந்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் 12 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் காயமடைந்ததாக காவல்துறையினர் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:20 PM
12 workers suffer minor burns in fire accident in Hyderabad
பகிர்:

ஹைதராபாத்தில் உள்ள நகைக்கடை பிரிவில் எரிவாயு சிலிண்டர் கசிந்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் 12 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் காயமடைந்ததாக காவல்துறையினர் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

இந்த சம்பவம் புதன்கிழமை இரவு 11.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவர். மிர்ச்சோக்கில் உள்ள நகைக் கடை யூனிட்டில் எரிவாயு சிலிண்டரைப் பயன்படுத்தி பணிபுரிந்துகொண்டிருந்தனர். 

அப்போது, திடீரென சிலிண்டரிலிருந்து எரிவாயு கசிந்து, இரண்டு அறைகளில் தீ பரவியதால், தொழிலாளர்கள் தீக்காயமடைந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். 

பின்னர், தீயைக் கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. தற்போது புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமை சீராக உள்ளதாக கவால்துறை அதிகாரி தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.