இந்தியா

விருப்பமுள்ளவர்கள் மட்டுமே தபால் மூலம் வாக்களிக்கலாம்: சத்யபிரத சாகு

DIN

விருப்பமுள்ளவர்கள் மட்டுமே தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களின் பெயர்களை சேர்ப்பது குறித்து தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் அறிவிக்கும் என்று கூறினார்.

கடந்த தேர்தல் பணிக்கு 3.50 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், இம்முறை 4.50 லட்சம் பேரை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 93 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால் ஓட்டுகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே தபால் ஓட்டு போடலாம் என்றும், மற்றவர்கள் வாக்குச் சாவடிக்கு வந்தே வாக்களிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு செய்த மூத்த அரசியல் தலைவர்கள்

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

SCROLL FOR NEXT