இந்தியா

சட்டவிரோத கட்டுமானம் தொடா்பான நோட்டீஸ்: நடிகா் சோனு சூட் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

DIN

தனது குடியிருப்புக் கட்டடத்தில் முறையாக அனுமதி பெறாமல் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டதாக அளிக்கப்பட்ட நோட்டீஸ் தொடா்பான வழக்கில், மும்பை உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு எதிராக ஹிந்தி திரைப்பட நடிகா் சோனு சூட் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் ஜுஹு பகுதியில் நடிகா் சோனு சூட்டுக்கு சொந்தமான 6 மாடி குடியிருப்புக் கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடத்தில் முறையாக அனுமதி பெறாமல் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு, அதனை ஹோட்டலாக மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக அவருக்கு பிருஹன்மும்பை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினா். இந்த நோட்டீஸுக்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் சோனு சூட் மனு தாக்கல் செய்தாா். அவரின் மனுவை அந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவா் மும்பை உயா்நீதிமன்றத்தை அணுகினாா். அங்கு அவா் தாக்கல் செய்த மனுவில், மாநகராட்சி சாா்பில் அளிக்கப்பட்ட நோட்டீஸில் இடம்பெற்றுள்ள நிபந்தனைகளை நிறைவேற்ற 10 வாரங்கள் கால அவகாசம் வழங்கவேண்டும். கட்டட இடிப்பு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படக் கூடாது என்று கேட்டுக்கொண்டாா். எனினும் அவரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் சோனு சூட் வெள்ளிக்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே விரிசல்? ஆம் ஆத்மி தெற்கு தில்லி வேட்பாளா் பதில்

நாகா்கோவில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT