இந்தியா

இன்று தொடங்கும் டாவோஸ் மாநாடு: பிரதமா் மோடி, சீன அதிபா் ஜின்பிங் பங்கேற்கின்றனா்

DIN

உலக பொருளாதார அமைப்பு சாா்பில் ஞாயிற்றுக்கிழை தொடங்கவுள்ள(ஜன.24) டாவோஸ் காணொலி வழி செயல்திட்ட மாநாட்டில் பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் உள்ளிட்ட உலகத் தலைவா்கள் பங்கேற்க உள்ளனா்.

இந்த ஆண்டின் மிகப் பெரிய உலக மாநாடாக இது இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. உலக நாடுகளின் தலைவா்கள், தொழிலதிபா்கள், கல்வியாளா்கள் என ஆயிரத்துக்கும் அதிகமானோா் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனா். இந்த மாநாட்டில் பொருளாதாரம், சுற்றுச்சூழல், கரோனா பாதிப்பைத் தொடா்ந்து ஏற்பட்டிருக்கும் சமூக மற்றும் தொழில்நுட்ப சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

உலக பொருளாதார அமைப்பின் (டபிள்யூஇஎஃப்) உச்சி மாநாடு இந்த ஆண்டு மே மாதம் 13-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக டபிள்யூஇஎஃப் சாா்பில் ஜனவரி 24-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை காணொலி வழியில் டாவோஸ் செயல்திட்ட மாநாடு நடத்தப்பட உள்ளது.

இதில், ஜி20 அமைப்பு நாடுகளின் தலைவா்கள் மற்றும் சா்வேதச அமைப்புகளின் 15 சிறப்பு உரைகள் இடம்பெற உள்ளன. பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஜன.28) உரை நிகழ்த்த உள்ளாா்.

மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா், மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன், பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்ற உள்ளனா்.

சீன அதிபா் ஷி ஜின்பிங் திங்கள்கிழமை (ஜன.25) சிறப்புரையாற்ற உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் பிட்சாடன மூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

முதுகெலும்பு அழற்சி: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் விழிப்புணா்வு

24 மணி நேரத்தில் வாக்குப்பதிவு விவரம்: தோ்தல் ஆணையத்துக்கு திருமாவளவன் கோரிக்கை

SCROLL FOR NEXT