மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி 
இந்தியா

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் மேற்குவங்கம்

நடைபெற உள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளும் திரிணமூல் அரசு வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற உள்ளது.

DIN

நடைபெற உள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளும் திரிணமூல் அரசு வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற உள்ளது.

வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 60 நாள்களுக்கும் மேலாக தலைநகர் தில்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். பாஜக அல்லாத பல்வேறு மாநில அரசுகளும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தங்களது சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றன.

இந்நிலையில் மேற்கு வங்க மாநில அரசு வியாழக்கிழமை நடைபெற உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற உள்ளது. இரண்டு நாள் நடைபெற உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் 169வது விதியின் கீழ் ஜனவரி 28ஆம் தேதி தீர்மானம் தாக்கல் செய்யப்படும் என மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

முன்னதாக பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், கேரளம் மற்றும் தில்லி ஆகிய மாநிலங்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

தவெக பொதுக்குழு கூட்டம்! மேடைக்கு வந்த விஜய்!

SCROLL FOR NEXT