முகப்பு
இந்தியா

சசிகலாவிற்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பு

சசிகலாவிற்கு ஆறு நாள்களுக்கு பிறகு ரத்த அழுத்தம் மீண்டும் அதிகரித்துள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:24 PM
சசிகலா (கோப்புப்படம்)
பகிர்:

சசிகலாவிற்கு ஆறு நாள்களுக்கு பிறகு ரத்த அழுத்தம் மீண்டும் அதிகரித்துள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு தண்டனை பெற்ற வி.கே.சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் 2017-இல் அடைக்கப்பட்டனர்.  
இந்நிலையில், கடந்த 20-ஆம் தேதி சசிகலாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதையடுத்து, அவர் பெங்களூரு, சிவாஜி நகரில் உள்ள பெளரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று உறுதியானது. தற்போது கரோனா தொற்று குறைந்து, அவர் சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். 
இந்த நிலையில் சசிகலாவிற்கு ஆறு நாள்களுக்கு பிறகு ரத்த அழுத்தம் மீண்டும் அதிகரித்துள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விக்டோரியா மருத்துவமனை தரப்பில் மேலும் தெரிவிக்கையில், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 278ஆக இருப்பதால் அவருக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்படுகிறது. சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது. சிகிச்சைக்கு அவர் ஒத்துழைக்கிறார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இதனிடையே விக்டோரியா அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் நிலையில், 4 ஆண்டுகால சிறைத்  தண்டனை முடிந்துவிட்டதால், புதன்கிழமை காலை 11 மணிக்கு மத்திய சிறை காவல் கண்காணிப்பாளர் சேஷமூர்த்தி, துணை காவல் கண்காணிப்பாளர் லதா இருவரும் மருத்துவமனைக்குச் சென்று சசிகலாவை விடுதலை செய்துவிட்டதாக அறிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →