குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு
நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் நடைபெறும் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் நடைபெறும் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
நடப்பு ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை(ஜன.29) காலை 11 மணிக்குத் தொடங்குகிறது. கூட்டத்தொடரின் தொடக்க நிகழ்வாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை காலை 11 மணிக்கு உரையாற்றவுள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் அமர்வு நாளை முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
மொத்தமாக 16 எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் பொருட்டு இவ்வாறு முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.