இந்தியா

மேற்கு வங்கத் தேர்தல்: காங்கிரஸ்-இடதுசாரிகளிடையே 193 தொகுதிகளில் உடன்பாடு

DIN

எதிர்வரும் மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கட்சிகளிடையே 193 தொகுதிகளில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தத் தோ்தலில் ஒன்றிணைந்து போட்டியிட உள்ளதாக இடதுசாரி கட்சிகளும் காங்கிரஸும் அறிவித்துள்ளன.

இதனையொட்டி மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள சூழலில், தொகுதிப் பங்கீடு தொடா்பாக இடதுசாரிகளும் காங்கிரஸும் இரண்டாம் கட்டப்பேச்சுவார்த்தை நடத்தின. மொத்தம் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 193 இடங்களுக்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் 48 இடங்களிலும், இடதுசாரி கட்சிகள் 68 இடங்களிலும் போட்டியிட உடன்பாடு செய்யப்பட்டது. இதன்மூலம் தற்போதைய சூழலில் 92 இடங்களில் இடதுசாரி கட்சிகளும், 101 இடங்களில் காங்கிரஸும் போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

SCROLL FOR NEXT