முகப்பு
இந்தியா

பொதுமுடக்கத்தால் சரிந்த ஜி.டி.பி. விரைவில் மீட்டெடுக்கப்படும்: நிதியமைச்சகம்

பொதுமுடக்கத்தால் ஜி.டி.பி.யில் ஏற்பட்ட சரிவு விரைவில் மீட்டெடுக்கப்படும் என்று நிதியமைச்சக பொருளாதார ஆலோசகர் தெரிவித்தார்.

Updated On : 29 ஜனவரி, 2021 at 4:23 PM
பொதுமுடக்கத்தால் சரிந்த ஜி.டி.பி. விரைவில் மீட்டெடுக்கப்படும்: நிதியமைச்சகம்
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:54 AM

பொதுமுடக்கத்தால் ஜி.டி.பி.யில் ஏற்பட்ட சரிவு விரைவில் மீட்டெடுக்கப்படும் என்று நிதியமைச்சக பொருளாதார ஆலோசகர் தெரிவித்தார்.

மூத்த பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன் பொருளாதார ஆய்வறிக்கை 2020-21 ஐ மாநிலங்களவையில் அறிமுகம் செய்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது, நடப்பாண்டு பொருளாதார ஆய்வறிக்கை கரோனா எதிர்ப்பு போராளிகளுக்கு அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார்.

Advertisement

பொதுமுடக்கத்தை அமல்படுத்தியதால் தொற்று பரவல் கட்டுக்குள் வந்தது. பொதுமுடக்கம் இல்லாவிட்டால் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை பல லட்சங்களைக் கடந்திருக்கும்.

பொதுமுடக்கத்தால் இழந்த ஜி.டி.பி. விரைவில் மீட்டெடுக்கப்படும். ஆனால் இழந்த உயிர்களை மீட்பது இயலாத செயல். 

பொதுமுடக்கம் அறிவித்திருக்காவிட்டாலும் கரோனா பெருந்தொற்று பொருளாதார சரிவை ஏற்படுத்தியிருக்கும். பொதுமுடக்கம் விரைவில் பெருந்தொற்றிலிருந்து தப்பிக்கவும், பலரது உயிரைக் காக்கவும் உதவியது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.