இந்தியா

‘குடியரசுத் தலைவரின் உரையைப் புறக்கணித்தது துரதிருஷ்டவசமானது’: அமைச்சர் ரவிசங்கர்

DIN

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவரின் உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தது துரதிருஷ்டவசமானது என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்நிலையில் வேளாண் சட்டங்களை எதிர்த்து குடியரசுத் தலைவரின் உரையை காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “குடியரசுத் தலைவர் அனைவருக்குமானவர். அவர் இந்திய அரசியலமைப்பின் தலைவர். ஜனநாயகத்தில் அவரது உரையை மதிப்பது என்பது ஆரோக்கியமான நடைமுறையாகும்.” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, ”குடியரசுத் தலைவர் உரையை எதிர்க்கட்சிகள், குறிப்பாக 50 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி புறக்கணித்திருப்பது துரதிருஷ்டவசமானது” என ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருப்பு-வெள்ளை நாகினி!

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து

உன்னைப் போல யாருமில்லை! கெடிகா சர்மா..

வைரலாகும் ரன்பீர் கபூரின் புகைப்படங்கள்!

ஷாலு.. சஞ்சிதா ஷெட்டி!

SCROLL FOR NEXT