நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: குடியரசுத்தலைவர் உரையுடன் தொடக்கம்
நாடாளுமன்றத்தில் நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்கியது. ஆண்டின் முதல் பட்ஜெட் கூட்டம் என்பதால் இரு அவைகளிலும் குடியரசுத்தலைவர் உரையாற்றுகிறார்.
நாடாளுமன்றத்தில் நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்கியது.
ஆண்டின் முதல் பட்ஜெட் கூட்டம் என்பதால் இரு அவைகளிலும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.
இன்று தொடங்கியுள்ள முதல் கட்டக் கூட்டத்தொடா் பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
2021-22-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவரின் உரையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய மாநாட்டுக் கட்சி, திமுக, மதிமுக, திரிணமூல் காங்கிரஸ், சிவசேனை, சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணித்துள்ளன.
நாடாளுமன்றத்திற்கு வெளியே எம்.பி.க்கள் போராட்டம்:
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே இடதுசாரி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும்போது, நாடாளுமன்ற வாயிலில் கைகளில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியவாறு இடதுசாரி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.