வேளாண் போராட்டத்தில் இளைஞர்கள் 
இந்தியா

வேளாண் போராட்டம்: வீட்டிற்கு ஒரு நபரை அனுப்பி வைக்கும் கிராமம்

வேளாண் போராட்டத்தில் பங்கேற்பதற்காக பஞ்சாபில் உள்ள ஒரு கிராமம் கட்டாயம் வீட்டிலிருந்து ஒரு நபரை வாரமொரு கணக்கில் அனுப்பிவைக்க முடிவெடுத்துள்ளது.

DIN

வேளாண் போராட்டத்தில் பங்கேற்பதற்காக பஞ்சாபில் உள்ள ஒரு கிராமம் கட்டாயம் வீட்டிலிருந்து ஒரு நபரை வாரமொரு கணக்கில் அனுப்பிவைக்க முடிவெடுத்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 66 வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இதனிடையே தில்லி-ஹரியாணா எல்லையான சிங்கு, திக்ரி பகுதியிலும், தில்லி-உத்தரப் பிரதேச எல்லையான காஜிப்பூர் எல்லையிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் தில்லி காவல்துறை ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் வீட்டிலிருந்து கட்டாயம் ஒரு நபர் வாரமொரு கணக்கில் வேளாண் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று பஞ்சாபில் பதிண்டா பகுதியிலுள்ள விர்க் குர்த் என்ற கிராமம் முடிவு செய்துள்ளது.

குடும்பத்திற்கு ஒரு நபர் கட்டாயம் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும், இல்லையென்றால் ரூ.1500 அபராதமாக விதிப்பதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் போராட்டத்தில் பங்கேற்பதற்காக வீட்டிற்கு ஒரு நபரை கட்டாயம் தில்லி எல்லைக்கு அனுப்பிவைக்கும் கிராமம் பஞ்சாபில் மற்ற கிராமங்களுக்கு முன்னுதாரணமாகவுள்ளதாக அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT