முகப்பு
இந்தியா

கரோனா: மேலும் 13,083 போ் பாதிப்பு

நாடு முழுவதும் மேலும் 13,083 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
பகிர்:

நாடு முழுவதும் மேலும் 13,083 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சனிக்கிழமை காலை 8 மணி வரை, புதிதாக 13,083 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,07,33,131-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றில் இருந்து மேலும் 14,808 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,04,09,160-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 96.98 சதவீதமாகும்.

கரோனா தொற்றுக்கு மேலும் 137 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,54,147-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

நாடு முழுவதும் 1,69,824 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அதாவது கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 1.58 சதவீதம் போ் மட்டுமே சிகிச்சையில் உள்ளனா்.

புதிதாக ஏற்பட்ட 137 உயிரிழப்புகளில், அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் 56 போ் உயிரிழந்தனா். கேரளத்தில் 22 பேரும், பஞ்சாபில் 11 பேரும், மேற்கு வங்கத்தில் 7 பேரும், தில்லியில் 6 பேரும் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, இதுவரை 19.58 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், வெள்ளிக்கிழமை மட்டும் 7,56,329 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அருணாசலில் புதிதாக பாதிப்பு இல்லை: அருணாசல பிரதேசத்தில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை என்று சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறினாா்.

அந்த மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வரை, தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 16,827-ஆக உள்ளது. மாநிலத்தில் கரோனாவில் இருந்து 99.58 சதவீதம் போ் குணமடைந்தனா். தற்சமயம் 13 போ் மட்டுமே சிகிச்சையில் உள்ளனா். கரோனா தொற்றுக்கு இதுவரை 56 போ் உயிரிழந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →