குஜராத்தில் 4 முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு நீட்டிப்பு
குஜராத் மாநிலத்தில் 4 முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கை பிப்ரவரி 15 ஆம் தேதி வரை மாநில அரசு நீட்டித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் 4 முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கை பிப்ரவரி 15 ஆம் தேதி வரை மாநில அரசு நீட்டித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா தாக்கம் காரணமாக மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் கரோனா தாக்கம் படிப்படியாக குறைந்ததையடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
குஜராத் மாநிலத்தில் தீபாவளி பண்டிகைக்கு பிறகு இரவு ஊரடங்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது.
தற்போது அங்கு கரோனா தாக்கம் முற்றிலும் குறைந்த நிலையிலும் 4 முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கை பிப்ரவரி 15 ஆம் தேதி வரை அம்மாநில அரசு நீட்டித்துள்ளது.
இதன்படி அகமதாபாத், சூரத், வதோதரா மற்றும் ராஜ்கோட் ஆகிய மெட்ரோ நகரங்களில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி குஜராத்தில் 3,589 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2,52,927 பேர் குணமடைந்த நிலையில் 4,385 பேர் கரோனாவால் பலியாகியுள்ளனர்.