பாஜக அரசின் திட்டம்தான் தில்லி வன்முறை: நவாப் மாலிக்
விவசாயிகள் போராட்டத்துக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக பாஜக அரசால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதுதான் தில்லி வன்முறை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.
விவசாயிகள் போராட்டத்துக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக பாஜக அரசால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதுதான் தில்லி வன்முறை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுபற்றி மும்பையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியது:
"விவசாயிகளின் போராட்டத்துக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக பாஜக அரசு முன்கூட்டியே திட்டமிட்டதுதான் தில்லி வன்முறை. ஜெனரல் டயர் திட்டத்தை அமல்படுத்தி விவசாயிகளின் போராட்டத்தை முடித்துக்கட்ட மத்திய அரசு முயற்சிக்கிறது. ஆனால், இந்தத் திட்டம் பயனளிக்காது என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்."
முன்னதாக, காந்தி நினைவு தினத்தையொட்டி மந்திராலயா அருகே உள்ள காந்தி சிலைக்கு நவாப் மாலிக் உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.