முகப்பு
இந்தியா

காந்தி நினைவுநாள்: தலைவர்கள் மரியாதை

மகாத்மா காந்தியின் நினைவு நாள் இன்று நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
காந்தி நினைவுநாள்: குடியரசுத் தலைவர் மரியாதை
பகிர்:


புது தில்லி: மகாத்மா காந்தியின் நினைவு நாள் இன்று நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

புது தில்லி, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.
 

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்ந்தார். அவரது கொள்கைகளான உண்மையும், அகிம்சையும், தற்போதிருக்கும் சூழ்நிலையில், எந்த பிரச்னையிலும் வெற்றி காண பொருத்தமானதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் 73வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவருக்கு புகழஞ்சலி செலுத்தியிருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அகிம்சை மற்றும் சமூக நல்லிணக்கம் என்ற அவரது கொள்கைகள் தேசத்தை வளர்ச்சியை நோக்கி வழிநடத்தும் என்று கூறினார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →