தில்லி: 66-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம் 
இந்தியா

தில்லி: 66-வது நாளாகத் தொடரும் விவசாயிகள் போராட்டம்

தில்லி எல்லைகளில் 66-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

DIN

தில்லி எல்லைகளில் 66-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தில்லி-ஹரியாணா எல்லையான சிங்கு, திக்ரி பகுதியிலும், தில்லி-உத்தரப் பிரதேச எல்லையான காஜிப்பூர் எல்லையிலும் அதிக அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தில்லி - ஹரியாணா எல்லைப் பகுதியான சிங்குவில், போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் போராட்டக் களத்தை காலிசெய்யக் கோரி அப்பகுதிமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

நேற்று (ஜன.29) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட மோதலில் விவசாயிகளை அப்புறப்படுத்தும் நோக்கில் காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் விவசாயிகளை கலைத்தனர்.

எனினும் விவசாயிகள் தொடர்ந்து எல்லைப் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினருடன் அதிக அளவிலாக  காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 66 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT