முகப்பு
இந்தியா

கரோனாவுடன் போராட ஆரம்பித்து ஓராண்டு: ஷைலஜா

கரோனாவுடன் போராட ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளதாகவும், கரோனா பாதிப்பில் தற்போது அபாய கட்டத்தைக் கடந்துவிட்டதாகவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா (கோப்புப்படம்)
பகிர்:

கரோனாவுடன் போராட ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளதாகவும், கரோனா பாதிப்பில் தற்போது அபாய கட்டத்தைக் கடந்துவிட்டதாகவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி 30-ம் தேதி கேரளத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. 

சீனாவின் வூஹான் நகரில் கல்வி பயின்று வந்த மாணவி கேரள மாநிலம் திரிசூர் திரும்பிய நிலையில், அவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

கரோனா உறுதிசெய்யப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் இது குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்ததாவது, ''கரோனாவுடன் போராட ஆரம்பித்து ஓராண்டு ஆகிறது. எனினும் தற்போது நாம் பாதுகாப்பான இடத்தில் உள்ளோம். 

கேரளத்தில் தற்போதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், உயிரிழப்பு விகிதம் குறைந்து 0.4 சதவிகிதமாகவே உள்ளது.

கரோனா பரிசோதனை, தனிமைப்படுத்துதல், சிகிச்சை மேற்கொள்ளுதல் ஆகிய வழிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறோம்'' என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.