முகப்பு
இந்தியா

பஞ்சாபில் பிப். 2-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்

விவசாயிகள் நலன் குறித்து விவாதிப்பதற்காக பஞ்சாபில் பிப்ரவரி 2-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அமரீந்தர் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் (கோப்புப்படம்)
பகிர்:

விவசாயிகள் நலன் குறித்து விவாதிப்பதற்காக பஞ்சாபில் பிப்ரவரி 2-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அமரீந்தர் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வரும் நிலையில், விவசாயிகளின் நலன் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 67-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிங்கு, திக்ரி, காஜிப்பூர் எல்லைகளில் விவசாயிகளுக்கு அதிக அளவு எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிக அளவில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் தில்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், விவசாயிகளின் நலன் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பஞ்சாப் முதல்வர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.