இந்தியா

நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் சுமார் 89 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்

நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் சுமார் 89 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

DIN

நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் சுமார் 89 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

தேசிய போலியோ சொட்டு மருந்து தினத்தை, ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஜனவரி 30ஆம் தேதியன்று தொடங்கி வைத்தார். ‘போலியோ ஞாயிறு’ என்று அழைக்கப்படும் தேசிய போலியோ சொட்டு மருந்து தினமான இன்று, நாடு முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட சுமார் 89 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகள் கொடுக்கப்பட்டன.

7 லட்சம் இடங்களில் நடைப்பெற்ற, போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியில், 12 லட்சம் சுகாதாரப் பணியாளர்கள், 1.8 லட்சம் மேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

அடுத்த 2 முதல் 5 நாள்களில், வீடு வீடாக சென்று, விடுபட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி நடைபெறவுள்ளது.

தடுப்பு மருந்து பெறுவதில் இருந்து ஒரு குழந்தையும் விடுபடக் கூடாது என்பதற்காக, பேருந்து, ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்களில் போலியோ சொட்டுமருந்து குழுவினர் பணியமர்த்தப்பட்டனர்.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறுகையில், ‘‘10 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை பராமரிப்பது, இந்தியாவின் பொது சுகாதார வரலாற்றில் மிகப் பெரிய சாதனை என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த தமிழன்..! 20 போட்டிகளில் சாதித்த வருண் சக்கரவர்த்தி!

SCROLL FOR NEXT