பெங்களூருவில் கரோனாவுக்கு மனைவி பலி: மகள்களுடன் தந்தை தற்கொலை 
இந்தியா

பெங்களூருவில் கரோனாவுக்கு மனைவி பலி: மகள்களுடன் தந்தை தற்கொலை

கரோனா பாதித்து மனைவி மரணமடைந்த நிலையில், தனது இரண்டு மகள்களுடன் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN


கரோனா பாதித்து மனைவி மரணமடைந்த நிலையில், தனது இரண்டு மகள்களுடன் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவின் அனேகால் தாலுகாவுக்கு உள்பட்ட அட்டிபேலே என்ற கிராமப் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தற்கொலை செய்து கொண்டவர்கள் சதீஷ் (42), அவரது மகள்கள் கீர்த்தி (18), மோனிஷா (14) என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. கீர்த்தி பட்டப்படிப்பு முதலாமாண்டும், மோனிஷா 9-ஆம் வகுப்பும் படித்து வந்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை இரவு முதல் சதீஷ் செல்லிடப்பேசியை எடுக்காததால், புதன்கிழமை காலை சதீஷின் தந்தை, வீட்டுக்கு வந்த போது இந்த சம்பவம் தெரிய வந்துள்ளது. வீட்டின் கதவு தாழிடப்படாமல் இருந்துள்ளது. வீட்டுக்குள் மூவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு சதீஷின் மனைவி ஆஷா கரோனா பாதித்து உயிரிழந்த நிலையில், மிகுந்த மன உளைச்சலில் இருந்த மூவரும், வாழ்வதற்கு விருப்பமில்லாமல் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி கையெழுத்திட்டுள்ள கடிதமும் கிடைக்கப் பெற்றுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீலக்கொடிச் சான்று: தமிழகத்தின் 6 கடற்கரைகள் மேம்பாட்டுக்கு ரூ.24 கோடி

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு அமெரிக்காவில் 50% வரி அமல்

திருமலை மலைப் பாதையில் விநாயக சதுா்த்தி

மாணவா்களுக்கு ரூ.6.10 கோடி கல்விக் கடனுதவி: வேலூா் ஆட்சியா் வழங்கினாா்

செங்கத்தில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை ஊா்வலம்

SCROLL FOR NEXT