பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் மூலம் விவசாயிகள் ரூ.95,000 கோடி இழப்பீடு பெற்றுள்ளனர் என பயிர் காப்பீடு வார துவக்க நிகழ்ச்சியில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது: ஒவ்வொரு விவசாயிக்கும் பாதுகாப்பு அளிப்பதுதான் பயிர் பாதுகாப்பு திட்டத்தின் நோக்கம். இந்த காப்பீடு திட்டம் மூலம் விவசாயிகள் ரூ.95,000 கோடி இழப்பீடு பெற்றுள்ளனர்.
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தை அமல்படுத்தியதில் மாநில அரசுகள் மற்றும் காப்பீடு நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. அவர்களின் கடின உழைப்பால், கடந்த 4 ஆண்டுகளில், விவசாயிகள் பயிர் காப்பீடு ப்ரீமியமாக ரூ.17 ஆயிரம் கோடி செலுத்தியுள்ளனர்.
ஆனால் இழப்பீடாக அவர்களுக்கு ரூ.95 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். அப்போதுதான் அதிக விவசாயிகள் பலன் அடைவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.