இந்தியா

மேற்குவங்க பேரவையின் துணைத் தலைவராக ஆஷிஷ் பானர்ஜி தேர்வு

மேற்கு வங்க சட்டப்பேரவையின் துணைத் தலைவராக ஆஷிஷ் பானர்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

DIN

மேற்கு வங்க சட்டப்பேரவையின் துணைத் தலைவராக ஆஷிஷ் பானர்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்த பிறகு புதிய அமைச்சரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. 

கூட்டத்தொடரில் அவையின் துணைத் தலைவராக முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் ஆஷிஷ் பானர்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ஆளுநர் உரை முடிந்தவுடன் பேரவை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

சட்டப்பேரவைக் கூட்டமானது வருகிற ஜூலை 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூலை 7 ஆம் தேதி 2021-22க்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT