முகப்பு
இந்தியா

தில்லியில் 9 ஆண்டுகள் இல்லாத அளவு வெயில் அதிகரிப்பு

தில்லியில் கடந்த 9 ஆண்டுகளின் ஜூலை மாதங்களில் இல்லாத அளவு அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 2 ஜூலை, 2021 at 6:10 PM
தில்லியில் 9 ஆண்டுகள் இல்லாத அளவு வெயில் அதிகரிப்பு
பகிர்:

தில்லியில் கடந்த 9 ஆண்டுகளின் ஜூலை மாதங்களில் இல்லாத அளவு அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னெப்போதும் இல்லாத அளவு தில்லியில் கொளுத்தும் வெயிலால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர். நாள்தோறும் அதிகரிக்கும் வெப்பநிலையால் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் தில்லியில் கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவு ஜூலை மாதத்தின் அதிகபட்ச வெப்பநிலை நடப்பாண்டு பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

அதன்படி ஜூலை மாதத் தொடக்கத்தில் 43.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் இது ஆண்டு சராசரி அளவைக் காட்டிலும் 6 டிகிரி செல்சியஸ் அதிகம் எனத் தெரிவித்துள்ளது. அதேபோல் நடப்பு பருவக்காலத்தின் சராசரி வெப்பநிலை அளவைக் காட்டிலும் 4 டிகிரி செல்சியஸ் அதிகரித்து 31.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு பருவக்காலத்தில் தில்லியின் அதிகபட்ச வெப்பநிலையாக 43.5 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 28.2 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளன. முன்னதாக கடந்த 1987 மற்றும் 2012 ஆம் ஆண்டின் ஜூலை மாதங்களில் 43.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.