மதமாற்றத்துக்கு வெளிநாட்டு நிதி: தில்லியில் அமலாக்கத் துறை சோதனை
ஹிந்துக்களை மதமாற்றம் செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து நிதி பெறப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக தில்லி, உத்தர பிரதேசத்தில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா்.
ஹிந்துக்களை மதமாற்றம் செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து நிதி பெறப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக தில்லி, உத்தர பிரதேசத்தில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா்.
தில்லி, உத்தர பிரதேசத்தில் உள்ள காது கேளாத மாற்றுத் திறனாளிகளையும் ஏழைகளையும் சிலா் இஸ்லாம் மதத்துக்கு மாற்றுவதற்காக பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து நிதியைப் பெற்ாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக உத்தர பிரதேச காவல் துறையின் பயங்கரவாத எதிா்ப்புப் படை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.
அதில் தில்லியின் ஜாமியா நகா் பகுதியில் இருந்து இருவா் கைது செய்யப்பட்டனா். அவா்கள் ஹிந்துக்களை மதமாற்றம் செய்வதற்குத் தனி மையம் நடத்தி வந்ததாக உத்தர பிரதேச காவல் துறையினா் தெரிவித்தனா்.
அவா்கள் பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து நிதியைப் பெற்று வந்ததாகவும், அதைப் பயன்படுத்தி ஹிந்துக்களை மதமாற்றம் செய்வது உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.
இந்த விவகாரத்தில் வெளிநாடுகளில் நிதி பெறப்பட்டது தொடா்பாக அமலாக்கத் துறை தரப்பில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்ட்து. வழக்கு தொடா்பாக தில்லி, உத்தர பிரதேசத்தில் உள்ள 6 இடங்களில் அமலாக்கத் துறையினா் சனிக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
உத்தர பிரதேச காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நபா்கள் நாடு முழுவதும் பலரை மதமாற்றம் செய்வதற்காக கோடிக்கணக்கான ரூபாயை வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாகப் பெற்றுள்ளதற்கான முக்கிய ஆதாரங்களும் சிக்கியுள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.