பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி (கோப்புப்படம்) 
இந்தியா

‘மின் பிரச்னையால் பஞ்சாப் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது’: மாயாவதி

பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான மின் பிரச்னையால் மக்களின் வாழ்வாதாராம் பாதிக்கப்பட்டுள்ளதாக பகுதன் சமாஜ் தலைவர் மாயாவதி சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

DIN

பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான மின் பிரச்னையால் மக்களின் வாழ்வாதாராம் பாதிக்கப்பட்டுள்ளதாக பகுதன் சமாஜ் தலைவர் மாயாவதி சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாயாவதி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,

பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான மின் பிரச்னை காரணமாக மக்களின் பொது வாழ்க்கை, தொழில், விவசாயம் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

அங்கு ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சியினர் பிரிவினைவாதம் மற்றும் சண்டைகளின் ஈடுபட்டு வருவதால், மக்களின் பொதுநலனை காக்கும் பொறுப்பை மறந்துவிட்டனர்.

எனவே, பஞ்சாபின் எதிர்காலம் மற்றும் மக்களின் நல்வாழ்வை கருத்தில் கொண்டு வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் சிரோமணி அகாலி தளம் மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணியை பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்த வேண்டுமென மக்களை கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில், சிரோமணி அகாலி தளம் மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அயர்லாந்தில் இந்திய சிறுமி மீது இனவெறித் தாக்குதல்!

மெட்டபாலிக் சின்ட்ரோம் என்பது என்ன? இது ஆண்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன

இஸ்ரேல் பிரதமருடன் இந்தியத் தூதர், பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

இந்த வார ஓடிடி படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

SCROLL FOR NEXT