மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் 
இந்தியா

கட்டுப்பாடுகளை பின்பற்றாவிடில் தளர்வுகள் திரும்பப் பெறப்படும்: மத்திய அரசு எச்சரிக்கை

மலைப் பிரதேசங்களில் கரோனா கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றவில்லையெனில் தளர்வுகள் திரும்பப் பெறப்படும் என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

ANI

மலைப் பிரதேசங்களில் கரோனா கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றவில்லையெனில் தளர்வுகள் திரும்பப் பெறப்படும் என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

நாட்டில் கரோனா இரண்டாம் அலை குறைந்த போதிலும், மூன்றாம் அலைக்கான எச்சரிக்கை இருப்பதால் அனைத்து மாநிலங்களும் தளர்வுகள் அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் மக்கள் நடமாட்டம் இருப்பதாக இன்றைய சுகாதாரத்துறையின் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் கூறியதாவது,

நாட்டில் கரோனாவால் சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 5 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது. மகாராஷ்டிரம், தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திர பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் மட்டுமே 10 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்பு விகிதம் பதிவாகி வருகிறது.

இன்னும் சில பகுதிகளில் இரண்டாம் அலை குறையவில்லை. மலைப் பிரதேசங்களுக்கு செல்லும் மக்கள் கரோனா நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை. கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றவில்லையெனில் தளர்வுகள் திரும்பப் பெறப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

SCROLL FOR NEXT