கேரள உயர்நீதிமன்றம் 
இந்தியா

ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனு விசாரணை ஜூலை 16-க்கு ஒத்திவைப்பு

கேரள தங்கம் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூலை 16-ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

DIN

கேரள தங்கம் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூலை 16-ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மேலும் ஜூலை 16-ம் தேதிக்குள் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் கேரள உயநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூதரகம் வழியாக தங்கம் கடத்திய வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் முக்கிய குற்றவாளியாக சோ்க்கப்பட்டுள்ளாா். இது தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது

என்ஐஏ நீதிமன்றம் இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷுக்கு ஜாமீன் வழங்க மறுத்த நிலையில் கேரள உயா் நீதிமன்றத்தை அவா் நாடியுள்ளாா்.

இந்நிலையில் இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கேரள உயர்நீதிமன்றம், மனு மீதான விசாரணையை ஜூலை 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மேலும், இது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும்  உத்தரவிட்டுள்ளது. 

இந்த வழக்கில் தொடா்புடைய ஸ்வப்னா சுரேஷ், கே.டி.ரமீஸ், சந்தீப் நாயா், பி.எஸ்.சரித் உள்ளிட்ட ஏழு பேரின் ஜாமீன் மனுக்களை என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் கடந்த மாா்ச் 22-ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது  குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புரசைவாக்கம், சைதாப்போட்டையில் அமலாக்கத் துறை சோதனை

சூப்பர் 4 சுற்றில் இந்தியா உடன் மோதும் பாகிஸ்தான்..! எகிறும் எதிர்பார்ப்பு!

தொடர்ந்து ஏற்றத்தில் பங்குச் சந்தை! 25,500-யை நெருங்கும் நிஃப்டி!!

பாகிஸ்தான் - செளதி ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு! வெளியுறவு அமைச்சகம்

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT