முகப்பு
இந்தியா

நடிகர் திலீப் குமார் உடல்நலக் குறைவால் காலமானார்

பழம்பெரும் ஹிந்தி திரைப்பட நடிகர் திலீப் குமார் (98) உடல்நலக்குறைவால் மும்பையில் இன்று (ஜூலை 7) காலமானார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

புகழ்பெற்றம் ஹிந்தி திரைப்பட நடிகர் திலீப் குமார் உடல்நலக்குறைவால் மும்பையில் இன்று (ஜூலை 7) காலமானார்.  அவருக்கு வயது 98.

கடந்த ஜூன் 29-ம் தேதி சுவாசக் கோளாறு காரணமாக நடிகா் திலீப் குமாா் (98) மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இதனிடையே மருத்துவமனையில் இன்று காலை 7.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி  திலீப்குமார் உயிர் இன்று பிரிந்தது. இதனை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

Advertisement

முகமது யூசூப் கான் என்ற இயற்பெயர் கொண்ட நடிகர் திலீப்குமார் பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் 1922-ம் ஆண்டு பிறந்தவர்.  1944-ம் ஆண்டு ஸ்வார் படா என்ற படம் மூலம் அறிமுகமான இவர் 65-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 

 தேவதாஸ், கங்கா யமுனா, ஆன், தஸ்தான் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த  திரைப்படங்களாகும்.

திரையுலகில் சிறப்பான பங்காற்றியமைக்காக தாதா சாகேப் பால்கே விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments