முகப்பு
இந்தியா

தடுப்பூசி பணிகள்: தென்னிந்தியாவில் கர்நாடகம் முதலிடம்

தென்னிந்தியாவில் அதிக அளவில் தடுப்பூசி போடும் பணிகளில் கர்நாடக மாநிலம் முதலிடத்தில் இருப்பதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

தென்னிந்தியாவில் அதிக அளவில் தடுப்பூசி போடும் பணிகளில் கர்நாடக மாநிலம் முதலிடத்தில் இருப்பதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், தடுப்பூசி போடும் பணிகளில் கர்நாடகம் மீண்டும் ஒரு மைல் கல்லை எட்டியுள்ளது. இதுவரை 2 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தடுப்பூசி போடப்பட்ட பட்டியலை சுட்டுரையில் வெளியிட்டுள்ளார். 

கர்நாடகத்தில் இதுவரை 2.4 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. மேலும், 13 ஆயிரம் மையங்கள் மூலம் தினமும் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட முடியும் என்று கர்நாடக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →