இந்தியா

மாநிலங்களின் கையிருப்பில் 1.83 கோடி தடுப்பூசிகள்: சுகாதாரத்துறை

DIN

மாநிலங்களின் கையிருப்பில் 1.83 கோடி கரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்தியில்,

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் சார்பில் இலவசமாக இதுவரை 37,93,56,790 கரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், 36,09,69,128 கரோனா தடுப்பூசிகள் இதுவரை உபயோகிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களில் கையிருப்பில் 1,83,87,662 தடுப்பூசிகள் உள்ளன. மேலும், 23,80,000 தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் ஜூன் 21ஆம் தேதி முதல் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நெல்சன்!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT