முகப்பு
இந்தியா

நாட்டில் இதுவரை 36.48 கோடி தடுப்பூசி; நேற்று ஒரே நாளில் 33.81 லட்சம்

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை இன்று 36.48 கோடியைக் கடந்தது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
மாநிலங்களிடம் 1.67 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு
பகிர்:

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை இன்று 36.48 கோடியைக் கடந்தது. 

இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 47,40,833 முகாம்களில் 36,48,47,549 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 33,81,671 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,60,704 ஆகக் குறைந்துள்ளது. இது மொத்த தொற்றாளர்களில் 1.50 சதவீதமாகும். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,892 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொடர்ந்து 11-வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் 50,000-க்கும் கீழ் பதிவாகியுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 44,291 பேர் குணமடைந்துள்ளனர். நம் நாட்டில் இதுவரை மொத்தம் 2,98,43,825 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன்படி குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.18 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 18,93,800 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 42,52,25,897 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 2.37 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.42 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 17 நாட்களாக இந்த எண்ணிக்கை 3 சதவீதத்திற்கு குறைவாகவும், ஒரு மாத காலத்திற்கும் மேலாக 5 சதவீதத்திற்கு குறைவாகவும் உள்ளது.

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை இன்று 36.48 கோடியைக் கடந்தது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 47,40,833 முகாம்களில் 36,48,47,549 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 33,81,671 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
 

முழு கட்டுரையைப் படிக்க →