இந்தியா

அமைச்சரவை விரிவாக்கம்: புதிதாக 7 பெண் அமைச்சர்கள்

DIN


மத்திய அமைச்சரவையில் புதிதாக 7 பெண் அமைச்சர்கள் புதன்கிழமை பதவியேற்றுக்கொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. 43 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களில் 36 பேர் புதியவர்கள். 

மீனாக்ஷி லேகி, அனுப்ரியா படேல், ஷோபா கரந்தலஜே உள்ளிட்ட 7 பெண்கள் புதிதாக அமைச்சர் பதவியேற்றுள்ளனர். ஏற்கெனவே அமைச்சராக இருக்கும் நிா்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, சாத்வி நிரஞ்சன் ஜோதி, ரேணுகா சிங் ஆகியோருடன் சேர்த்து பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக, அமைச்சரவை விரிவாக்கத்தையொட்டி 12 மத்திய அமைச்சர்கள் ராஜிநாமா செய்தனர். இவர்களில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் இணையமைச்சராக இருந்த தேவஸ்ரீ சௌதரியும் ஒருவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத உச்சம்.. மகிழ்ச்சியில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்!

பெண்களுக்கு சமஅதிகாரமளிக்கும் இந்தியாவை உருவாக்குவோம் - சோனியா

மாட்டிறைச்சி தயார் செய்து வையுங்கள்: அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் பதில்!

திரைப்படமாகும் கருப்பின நாயகனின் வாழ்க்கை!

எப்படி இருந்திருக்க வேண்டியவர்... பிரபல நடிகருக்கு என்ன ஆனது?

SCROLL FOR NEXT