முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 45,982 பேருக்கு கரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,982 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
கோப்புப்படம்
பகிர்:


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,982 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம், 44,291 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 2,98,43,825 பேர் குணமடைந்துள்ளனர்.

குணமடைந்தவர்கள் எண்ணிக்கையைக் காட்டிலும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகளவில் பதிவாகியுள்ளதால் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 4,60,704 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பில் இது 1.50 சதவிகிதம்.

நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 97.18 சதவிகிதம்.

நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவதன் வாராந்திர விகிதம் தொடர்ந்து 5 சதவிகிதத்துக்கும் கீழ் இருந்து வருகிறது. தற்போது 2.37 சதவிகிதமாக உள்ளது. தினசரி பாதிப்பு உறுதி செய்யப்படுவதன் விகிதம் தொடர்ந்து 17 நாள்களாக 3 சதவிகிதத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது.

தடுப்பூசி:

நாட்டில் இதுவரை மொத்தம் 36.48 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.