இந்தியா

புதிய சுகாதாரத் துறை அமைச்சரின் முதல் பணி இதுவே: ப. சிதம்பரம்

DIN


மாநிலங்களுக்குத் தேவையான கரோனா தடுப்பூசிகள் எவ்வித இடையூறுமின்றி வழங்குவதை உறுதி செய்வதே புதிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் முதல் பணியாக இருக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் மேலும் பதிவிட்டுள்ளது:

"தடுப்பூசி இல்லாத காரணத்தினால் தமிழகத்தில் பல்வேறு சேவை மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் தடைபட்டுள்ளது. மாநிலங்களுக்குத் தேவையான தடுப்பூசிகளை எவ்வித இடையூறுமின்றி வழங்குவதை உறுதி செய்வதே புதிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் முதல் பணியாக இருக்க வேண்டும்.

இன்னமும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிப்பதற்கான வேலையில் இறங்க வேண்டாம். மாநிலங்களுக்கு தடுப்பூசி விநியோகிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்."

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதையொட்டி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார். புதிய சுகாதாரத் துறை அமைச்சராக மன்சுக் மாண்டவியா பதவியேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை காலை அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT