இந்தியா

மோடி தலைமையில் தொடங்கியது மத்திய அமைச்சரவைக் கூட்டம்

DIN


புதிதாக மத்திய அமைச்சர்கள் பதவியேற்றுள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையில் முதல்முறையாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியுள்ளது.

நாட்டில் கரோனா இரண்டாம் அலை குறைந்து வரும் சூழலில் நேற்று நடைபெறவிருந்த மத்திய அமைச்சரவைக் கூட்டம், அமைச்சரவை விரிவாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் புதிதாக பதவியேற்றுள்ள 15 மத்திய அமைச்சர்களுடன் இன்று மாலை கூட்டம் தொடங்கியது.

இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி அறிவித்த மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி, தீபாவளி வரை இலவச உணவு தானியங்கள் உள்ளிட்டவை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நேற்று நடைபெற்றது. அதில், புதிதாக 15 மத்திய அமைச்சர்களும், 28 இணை அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டார்கள். மேலும்,  அமைச்சர்களாக இருந்த ஹர்ஷ் வர்தன், பிரகாஷ் ஜவடேகர் உள்பட 12 பேர் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT