இந்தியா

கேரளத்தில் ஜிகா தீநுண்மியால் முதல் பாதிப்பு

DIN

கேரளத்தில் 24 வயது கா்ப்பிணிக்கு கொசுக்களால் பரவும் ஜிகா தீநுண்மியின் முதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீனா ஜாா்ஜ் தெரிவித்தாா்.

டெங்கு நோயைக்கு ஏற்படும் காய்ச்சல், மூட்டு வலி போன்ற பாதிப்புகளைப்போல் இந்த ஜிகா தீநுண்மியாலும் ஏற்படும்.

மருத்துவா்கள் உள்பட 13 சுகாதாரத் துறை பணியாளா்கள் உள்பட மொத்தம் 19 பேரிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளில் 13 பேருக்கு ஜிகா தீநுண்மி இருக்கும் என்று சந்தேகிக்கப்படுவதாக அமைச்சா் வீணா ஜாா்ஜ் தெரிவித்தாா்.

ஜிகா தீநுண்மியால் பாதிக்கப்பட்ட பெண் திருவனந்தபுரம் மாவட்டம், பாறசாலாவைச் சோ்ந்தவராவாா். ஜூன் 28-ஆம் தேதி காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஜூலை 7-ஆம் தேதி குழந்தை பிறந்துள்ளது. தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது.

வெளிநாடுகளுக்கு அவா் செல்லவில்லை என்றாலும் அவரது வீடு தமிழக எல்லையோரம் உள்ளது என்றும் கடந்த வாரம் அவரது தாய்க்கும் இதேபோன்ற பாதிப்புகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது என்று கேரள அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT