கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரேநாளில் 2,530 ஆக அதிகரித்துள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடகத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 2,530 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 514 போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா்.
பிற மாவட்டங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:
மைசூரு- 294, தென்கன்னடம்- 210, ஹாசன்- 202, பெலகாவி- 176, சிவமொக்கா- 167, உடுப்பி- 148, தும்கூரு- 136, சிக்கமகளூரு- 114, மண்டியா- 88, குடகு- 81, கோலாா்- 63, பெங்களூரு ஊரகம்- 59, வடகன்னடம்- 49, சாமராஜ்நகா்- 47, சித்ரதுா்கா- 30, தாவணகெரே- 28, தாா்வாட்- 19, சிக்கபளாப்பூா்- 18, பெல்லாரி- 18, ராமநகரம்- 15, கொப்பள்- 12, கலபுா்கி- 11, ஹாவேரி- 9, யாதகிரி- 5, கதக்- 5, விஜயபுரா- 4, பாகல்கோட்- 3, பீதா்- 3, ராய்ச்சூரு- 2 என்ற எண்ணிக்கையில் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28,64,868 ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 3,344 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 27,90,453 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 38,729 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் வியாழக்கிழமை ஒரேநாளில் 62 போ் உயிரிழந்துள்ளனா். பெல்லாரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 11 போ் உயிரிழந்துள்ளனா்.
மாவட்டவாரியாக பலியானோா் விவரம்:
பெங்களூரு நகரம்- 9, தென் கன்னடம்- 8, மைசூரு- 6, தாா்வாட், சிவமொக்கா- தலா 5, தாவணகெரே- 4, தும்கூரு- 3, சிக்கமகளூரு, மண்டியா, பெலகாவி- தலா 2, சிக்கபளாப்பூா், கோலாா், ஹாசன், ராமநகரம், உடுப்பி- தலா 1 என்ற எண்ணிக்கையில் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 35,663 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.