இந்தியா

விமானப் போக்குவரத்து துறை அமைச்சராக ஜோதிராதித்ய சிந்தியா பொறுப்பேற்பு

DIN

விமானப் போக்குவரத்து துறை அமைச்சராக ஜோதிராதித்ய சிந்தியா இன்று பொறுப்பேற்றார். 
இது குறித்து அவர் தனது சுட்டுரையில் கூறுகையில், ‘‘ஹர்தீப் சிங் பூரியிடம் இருந்து விமானப் போக்குவரத்து அமைச்சக பொறுப்பை ஏற்பதில் மகிழ்ச்சி. எனது கடமைகளை நேர்மையுடன் செய்யவும், ஹர்தீப் சிங் பூரி மேற்கொண்ட நல்ல பணிகளை தொடரவும் நான் உறுதியுடன் உள்ளேன்’’என்றார்.
இதற்கு முன்பு ஜோதிராதித்ய சிந்தியா தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சராக கடந்த 2007-2009ம் ஆண்டு வரையும்,
வர்த்தக மற்றும் தொழில்துறை இணையமைச்சராக 2009ம் ஆண்டு முதல் 2012ம் வரையும், மின்துறை இணையமைச்சராக கடந்த 2012ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையும் இருந்தார்.
இவர் மத்தியப் பிரதேசத்தில் இருந்து மக்களவைக்கு 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராகியுள்ளார்.
இதேபோல், விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சராக ஜெனரல்(ஓய்வு) விஜய் குமார் சிங் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். 
கடந்த 2014ம் ஆண்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் மத்திய அரசில் பல பொறுப்புகளில் இருந்தார். கடந்த 2019ம் ஆண்டு மக்களவைக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்ட அவர் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணையமைச்சராக பொறுப்பு வகித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி நள்ளிரவில் டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT