புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவர் பி.கே. வாரியர் மறைவு 
இந்தியா

புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவர் பி.கே. வாரியர் மறைவு

புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவரும், கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலை அறக்கட்டளையின் நிர்வாகியுமான பி.கே. வாரியர் இன்று காலமானார். அவருக்கு வயது 100.

DIN


மலப்புரம்: புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவரும், கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலை அறக்கட்டளையின் நிர்வாகியுமான பி.கே. வாரியர் இன்று காலமானார். அவருக்கு வயது 100.

கடந்த ஜூன் 8ஆம் தேதி தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடிய பி.கே. வாரியர் கோட்டக்கல்லில் இன்று பகல் 12.30 மணிக்கு காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை கோட்டக்கல்லில் உள்ள அவர்களது குடும்ப மயானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல் நலப் பாதிப்புகளுக்கு கோட்டக்கல்லில் உள்ள ஆர்ய வைத்திய சாலை  ஆயுர்வேத மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.  அண்மையில் அவர் கரோனாவிலிருந்து மீண்டு வந்திருந்தார். 

ஆயுர்வேத மருத்துவத்தில், ஆராய்ச்சி, மேம்பாடு, பரவலாக்கம் போன்றவாற்றால் உலகறியச் செய்த பெருமைக்குச் சொந்தக்காரரான இவருக்கு 1999ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2010ஆம் ஆண்டில் பத்ம விபூஷண் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயி அடித்துக் கொலை: இருவா் கைது

வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

நாகை புது கடற்கரையில் நீா் சறுக்கு சாகச விளையாட்டுப் போட்டி

"ஒருங்கிணைந்த என்டிஏ, ஒருங்கிணைந்த பிகார்': தேர்தல் முழக்க வாசகத்தை அறிமுகம் செய்த பிரதமர் மோடி

"வந்தே பாரத்' ரயில் மிகப்பெரிய வெற்றி: ரயில்வே அமைச்சர் பெருமிதம்

SCROLL FOR NEXT