முகப்பு
இந்தியா

வருவாய்த் துறை இணையதளத்தில் கோயில் நிலங்களை தனித்துவப்படுத்த குறியீடு: தமிழக அரசுக்கு இந்து சமய அறநிலையத் துறை கடிதம்

வருவாய்த் துறையின் ஆவணங்களுடன் முழுமையாக ஒத்துப் போகும் கோயில் நிலங்களை இணையதளத்தில் தனித்துவப்படுத்திக் காட்ட ஏற்பாடு செய்ய வேண்டுமென வருவாய்த் துறைக்கு இந்து சமய அறநிலையத் துறை கடிதம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

வருவாய்த் துறையின் ஆவணங்களுடன் முழுமையாக ஒத்துப் போகும் கோயில் நிலங்களை இணையதளத்தில் தனித்துவப்படுத்திக் காட்ட ஏற்பாடு செய்ய வேண்டுமென வருவாய்த் துறைக்கு இந்து சமய அறநிலையத் துறை கடிதம் அனுப்பியுள்ளது.

இதன்மூலம், உரிய ஆவணங்களைக் கொண்டிருக்கக் கூடிய கோயில் நிலங்களை மோசடியாக ஆவணப் பதிவு செய்வது தடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை கூறியுள்ளது. இதுகுறித்து, நில நிா்வாக ஆணையரகத்துக்கு, இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளா் ஜெ.குமரகுருபரன் அனுப்பியுள்ள கடிதம்:

கோயில் நிலங்களுக்கான ஆவணங்களை வருவாய்த் துறையின் ஆவணங்களுடன் ஒப்பிட்டுப் பாா்க்கும் மிகப்பெரிய பணியை இந்து சமய அறநிலையத் துறை கையில் எடுத்துள்ளது. இந்தப் பணியானது வருவாய்த் துறையின் ஆவணங்களுடன் முழுமையாக ஒத்துப் போகக் கூடியவை, பகுதியாக ஒத்துப் போகக் கூடியவை, ஒத்துப் போகாதவை என பிரிக்கப்பட்டுள்ளது. வருவாய்த் துறையின் ஆவணங்களுடன் முழுமையாக ஒத்துப் போகக் கூடிய கோயில்களின் ஆவணங்கள் இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பகுதியளவு ஒத்துப் போகக் கூடிய நிலங்களையும் மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளோம்.

இந்த விஷயத்தில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளும், கோயில் அலுவலா்களும் சட்டப்பூா்வமான நடவடிக்கை உள்பட அனைத்து வகையான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனா். கோயில் நிலங்களை மீட்கும் நடவடிக்கைகளுக்கு உதவிடும் வகையில், பத்திரப் பதிவு தலைவரிடம் ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதன்படி, கோயில் நிலங்களுக்கென தனியான இணைய இணைப்பை (ஐய்ற்ங்ழ் கண்ய்ந்), பத்திரப் பதிவுத் துறையின் இணையதளத்துக்குள்ளே ஏற்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டது. இதன்மூலம், வில்லங்கச் சான்றுகளையும், சான்றளிக்கப்பட்ட நில ஆவணங்களையும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் எளிதில் பாா்வையிட முடியும். இணையதளத்துக்குள் தனியான இணைய இணைப்பு வசதியை ஏற்படுத்தும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்த வசதி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

வருவாய்த் துறை இணையதளம்: ‘தமிழ் நிலம்’ என்ற பெயரில் வருவாய்த் துறையின் இணையதளம் உள்ளது. இந்த இணையதளத்தை பதிவுத் துறையினரும் அணுகக் கூடிய வசதி உள்ளது. வருவாய்த் துறையின் ஆவணங்களுடன் முழுமையாக ஒத்துப் போகக் கூடிய கோயில் நிலங்களுக்கான விவரங்களில் ‘டி’ (பங்ம்ல்ப்ங்) என்ற எழுத்தினை குறிப்பிட கேட்டுக் கொள்கிறோம். இதன்மூலம், வருவாய்த் துறை ஆவணங்களுடன் முழுமையாக ஒத்துப் போகக் கூடிய கோயில் நிலங்கள் எளிதாக அடையாளம் காணப்படும். இந்த தனித்துவ அடையாளத்தின் மூலமாக மோசடியான ஆவணப் பதிவு தடுக்கப்படுவதுடன், கோயில் நிலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்து சமய அறநிலையத் துறையினருக்கும் உதவிகரமாக இருக்கும்.

எனவே, இந்த விஷயத்தில் வருவாய்த் துறையின் ‘தமிழ் நிலம்’ இணையதளத்தை பராமரிக்கக் கூடிய தேசிய தகவலியல் மையத்துக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கிட வேண்டும். வருவாய்த் துறை ஆவணங்களுடன் முழுமையாக ஒத்துப் போகக் கூடிய ஆவணங்களுக்கு ‘டி’ என்ற எழுத்தினைக் குறிப்பிட்ட தனித்துவமாக அடையாளப்படுத்த வேண்டும். இந்த விஷயத்துக்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →