மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 8,535 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 8,535 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 8,535 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 8,535 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளத. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 61,57,799ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று 156 பேர் பலியானார்கள்.
இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 1,25,878ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,16,165 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 6,013 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 59,12,479ஆக உயர்ந்துள்ளது.
5,96,279 பேர் வீடுகளிலும், 4,672 பேர் நிறுவனங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.