இந்தியாவில் ஒரேநாளில் 37,154 பேருக்கு கரோனா; 724 பேர் பலி
இந்தியாவில் ஒரேநாளில் 37,154 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரேநாளில் 37,154 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 37,154 போ் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,08,74,376ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று 724 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 4,08,764ஆக உயர்ந்துள்ளது.
சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,50,899-ஆக உள்ளது. கரோனாவிலிருந்து இன்று 39,649 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 3,00,14,713 போ் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 14,32,343 பரிசோதனைகளும், நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 43,23,17,813 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசியின் எண்ணிக்கை 37 கோடியைக் கடந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா தொற்றால் தினசரி பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை தொடா்ந்து சரிந்து வருகிறது. தொடா்ந்து 15-ஆவது நாளாக தினசரி புதிய பாதிப்புகள் 50,000-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.